வேலூர் மாவட்டத்தில் பகலில் 91 டிகிரி பாரன்ஹீட்டில் வெயில் சுட்டெரித்தது. மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
அதாவது, சத்துவாச்சாரி , வள்ளலார், வேலூர் ஆட்சியர் அலுவலகம், கிரீன் சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை வேளையில் பெய்த கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.