வேலூர் அடுத்த அம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் நித்திய குமார். இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நேற்று (02. 10. 2024) மாலை வேலூரில் இருந்து அம்முண்டி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
பூட்டுத்தாக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் லேசான புகை வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த நித்திய குமார் சாலையோரம் ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். பின்னர் ஸ்கூட்டர் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அனைத்தனர். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எடுத்து ஐந்து மாதங்களே ஆன நிலையில் நடு ரோட்டில் திடீரென ஸ்கூட்டர் தீப்பிடித்து எறிந்த சம்பவம் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.