ஆம்பூர் அருகே பெரிய கொமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான யுவராஜ் என்பவரை அவரது உறவினர்கள் சொத்து பிரச்சினை காரணமாக தாக்கி அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று (அக் 7) கலெக்டர் அலுவலகத்திற்கு இதுவரை அளித்துள்ள மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் தர்ப்பகராஜிடம் மனு கொடுத்தார்.