திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மிலிட்டரி கேன்டீன் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரே சாலையில் இருபுறமும் வாகனங்கள் வருவதால் போக்குவரத்து துறை போலீசார் யாரும் பாதுகாப்புக்கு இல்லை. இதனால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.