திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இ. எஸ். ஐ, பி. எப் வைப்பு தொகையில் கடந்த ஒரு ஆண்டாக பணம் செலுத்தவில்லை.
இதேபோல், மின்மோட்டர் சைக்கிள் பழுது ஏற்பட்டால் அதை நாங்களே சரி செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் எங்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது. குப்பைக்கழிவுகளை அள்ளுவதற்கான உபகரணங்கள் வழங்காததால் வெறும் கைகளால் குப்பைகளை அள்ள வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.