ஆம்பூரில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை

84பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது இந்நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ சுமார் 3 மணி நேரமாக கனமழை குமாரமங்கலம், சின்ன வரிக்கம், ஆம்பூர் பஜார் பகுதி, ஏ கஸ்பா, கிருஷ்ணாபுரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் நாளை புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை என்பதால் பூஜைக்கு குண்டான பொருட்கள் வாங்குவதற்கு பஜார் வீதிகளில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி