திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிளி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் 50&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில், 20 வீடுகளுக்கு மேலே உயர் மின் அழுத்த கம்பிகள் செல்வதால் பெரும் ஆபத்து நேர வாய்ப்புள்ளது. எனவே, வீட்டின் மீது கைகள் படும்படி செல்லக்கூடிய உயர்மின்அழுத்த கம்பிகளை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.