மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து. தபால் நிலைய தற்காலிக ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. உடன் சென்ற சிறுவன் படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனாபள்ளி ஊராட்சிக்குட்பட்ட அங்கியாபள்ளி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (37). இவர் பார்சனாபள்ளி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது அண்ணன் மகள் தனுஶ்ரீ பிறந்த நாளுக்காக தனுஸ்ரீயின் தம்பி ஹரிஷ் (3) மற்றும் அசோக்குமாரின் மற்றொரு அண்ணன் மகன் பவன்குமார் (13) ஆகிய இருவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஆம்பூர் சென்று பிறந்தநாள் கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது சாமுண்டியம்மன் தோப்பு அருகில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் பலத்த காயமடைந்த மூன்று வயது சிறுவன் ஹரிஷை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்தில் பவன்குமார் காயமின்றி உயிர்தப்பினார்.