கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

தி. மலை மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள் போட்டிகள் நேற்று நடந்தது. விளையாட்டுப் போட்டியை, கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தொடங்கி வைத்தார். மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, பெரணமல்லூர், வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய 11 குறு மையங்களில் 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 10 வகையான போட்டிகளும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் 16 வகையான போட்டிகளும், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் 16 வகையான போட்டிகளும் நடைபெற்றது. அதன்படி, ஒவ்வொரு குறு மையத்தில் இருந்தும் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 1357 மாணவ, மாணவியர்கள் 2024 2025ம் கல்வி ஆண்டில் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலானப் போட்டிகளில் ஒவ்வொரு குறு மையத்தில் இருந்தும் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 694 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்டகல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை