பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் த.வெ.க.

52பார்த்தது
பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் த.வெ.க.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இடம் பெற்றுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு பின் புதியதாக பதிவு செய்த 39 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் முகவரியில் தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாளை மறுதினம் (அக் 27) த.வெ.க-வின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி