திருவண்ணாமலை குப்பனத்தம் அணையின் தற்போதைய நிலவரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் செங்கம் அருகே உள்ள குப்பனத்தம் அணைக்கு விநாடிக்கு 86 கன அடி நீா் வந்துகொண்டுள்ளது. அணையின் நீா்மட்டம் தற்போது 54. 30 அடியாகவும், கொள்ளளவு 321 மி. கன அடியாகவும் உள்ளது. அணைக்கு தற்போது வரும் 86 கன அடி நீா் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.