உடுமலை: கள் இயக்க 2026ல் அனுமதி உறுதி -அண்ணாமலை பேட்டி

55பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரம் கிராமத்தில் கல் விடுதலை கருத்தரங்கில் கலந்து
கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் பொழுது. கள்ளை பொறுத்தளவில் 3. 8% ஆல்கஹால் உள்ளது. சாதாரண பீர் எடுத்துகிட்டீங்கன்னா 12% க்கு குறைவாக ஆல்கஹால் கிடையாது. ஒரு கார்த்திகை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் 40% ஆல்கஹால் உள்ளது. அது எல்லாம் விற்கின்றார்கள் மக்கள் குடிக்கின்றனர். கள்லைப் பொருத்தவரை மார்க்கெட்டுக்கு கொண்டு வர வேண்டும், விவசாய பெருமக்களுக்கு அதன் மூலமாக வருவாய் கிடைக்க வேண்டும். அதே ரீதியில் எல்லா மனிதர்களுக்கும் சென்னையில் இருந்து வரக்கூடிய எல்லா பொருட்களும் அதனுடைய பால் மகத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவாக இருக்கிறோம் 2026 மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்பொழுது கள் இறக்குவதற்கான அனுமதியை நிச்சயமாக நாங்கள் கொடுக்கத்தான் போகின்றோம். நிறைய கட்சிகள் ஒரு நிலைப்பாட்டிற்கு வர இருக்கின்றார்கள். 2026 நிச்சயம் கள்ள இறக்குவதற்கான அனுமதி கொடுக்கத்தான் போகின்றோம் ‌. மக்களுடையஆதரவும் , விவசாய பெருமக்களுடைய ஆதரவு தென்னை மரம், பனைமரம் தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு எல்லா விவசாய பெருமக்களும் எங்களோடு நிற்க வேண்டும் என அன்பான வேண்டுகோளை வைக்கின்றோம்" என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி