உடுமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

65பார்த்தது
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவை பழனியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசம் எழுப்பப்பட்டது. இது குறித்து மாநில மாவட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை ஆற்றினார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரிகந்தசாமி, மாநில ஓபிசி அணி செய்தி தொடர்பாளர் எஸ். கே. கார்வேந்தன், மடத்துக்குளம் பூரண மண்டல பொறுப்பாளர் கண்ணாயிரம் உடுமலை, மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி