உடுமலையில் ஆசிரியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது புகார்

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கல்லாபுரத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் பெதம்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வெயிலின் தாக்கத்தால் நின்ற போது, அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஜாகிர் முனியப்பன் அங்கு நின்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜாகிர் முனியப்பனை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சக ஆசிரியர்கள் ஆசிரியர் முனியப்பனை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி