கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விஜயகுமாரை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அவர் கையெழுத்திட்ட நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.