திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்தில் தாராபுரத்தில் இருந்து உடுமலைக்கு வருகை தந்த தனியார் பஸ்சும், பூளவாடியில் இருந்து உடுமலைக்கு வந்த தனியார் பஸ்சும் நேர ஒதுக்கீடு சம்பந்தமாக தகராறில் ஈடுபட்டது. அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் பஸ்களை தாறுமாறாக நிறுத்திக் கொண்டனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டதுடன் பொதுமக்களும் மற்ற பஸ் டிரைவர்களும் அவதிக்கு உள்ளானார்கள். இதுகுறித்து சமூக அலுவலர்கள் கூறுகையில்,
தனியார் பஸ்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படியே இயக்கியும் வருகின்றனர். ஆனால் நேற்று தகராறில் ஈடுபட்ட இரண்டு தனியார் பஸ்களும் நீண்ட நாட்களாக நேர ஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியும் வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து இரண்டு பஸ்களையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு போக்குவரத்து சீரானது. இது குறித்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை செய்து தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.