ஸ்ரீரங்கம் - Srirangam

திருச்சி: உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து மறியல்

திருச்சி: உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து மறியல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி அண்ணா நகரை சேர்ந்த சேட்டு என்பவரது மகன் விஜயராகவன் (வயது 18) இவர் நேற்று வீட்டிற்கு அருகாமையில் உள்ள வாட்டர் டேங்கில் குளித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது அங்குள்ள ஒரு வீட்டிற்கு செல்லும் ஸ்டே கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக வந்த விஜயராகவன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் அவர் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் அறிந்து வந்த சமயபுரம் போலீசார் விஜயராகவன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விஜயராகவனின் உறவினர்கள் அலட்சியமாக செயல்பட்ட மின்சார துறை ஊழியர்களையும் அதிகாரிகளையும் கண்டித்து விஜயராகவனின் உடலை வாங்க மாட்டோம் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஸ்ரீரங்கம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். முக்கியமான பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவரின் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా