திருச்சி: கேர் கல்லூரியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

65பார்த்தது
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட தாயனூரில், அமைச்சர் கே. என் நேருவிற்குச் சொந்தமான கேர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி. காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வரும் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம், இருளர் தெருவை சேர்ந்த மாணவி திவ்யா என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திவ்யா இ1எப்1 என்ற தனது விடுதிஅறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக சக மாணவிகள் கதவைத் தட்டிய போது திறக்கப்படாத நிலையில் ஜன்னலை திறந்து பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கல்லூரிவிடுதி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை ராம்ஜி நகர் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி