
திருச்சி அருகே 1. 2 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சியை அடுத்த ராம்ஜி நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மொபட்டில் வந்த ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற கிசான் (40), ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த முரளி (66) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்திய போது, கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.