சோமரசம்பேட்டையில் அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

77பார்த்தது
அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் சோமரசம்பேட்டை வயலூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அ. தி. மு. க. நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான பரஞ்சோதி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ராசு ஆகியோர் ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் 9 பேர் கொண்ட குழு பூத் கிளைகள் அமைப்பது, இளைஞர், இளம் பெண்கள் பாசறை கிளைகளை விரைவாக ஒவ்வொரு பூத்திலும் அமைப்பது, இளம் தலை முறையினர் விளையாட்டு வீரர்கள் அணியில் உறுப்பினர்களை சேர்ப் பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட் டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, அண்ணாவி, சிறு பான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் மற்றும் மணிகண் டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், இளைஞர் அணி துணைச் செயலாளர் தேவ ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை செயலா ளர் ஏ. ஜி. அருண், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் தர் மேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி