ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக் கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்த ருளி அம்பாள் தீர்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்ச கர்கள், ஸ்தலத்தார்கள், அதிகாரிகள், தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, வாணவேடிக்கையு டன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தரு ளியிருந்த பந்தலுக்கு வந்தனர்.
அங்கு சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் அதி காரிகள் மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் அதிகாரி கள், அர்ச்சகர்கள், வழங் கினர். இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டுவஸ்திரம். மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.