பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது.
அதன்படி, திருவானைக்காவல் கோயிலில் மண்டல பிரம்மோற்சவ பெருவிழா இன்று காலை, பெரிய கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வரும் 25ம் தேதி, எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து வரும் 29ம் தேதி தெருவடைச்சான் எனப்படும் சப்பர ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம், வரும் 30-ம் தேதி காலை 7. 09 மணிக்கு மேல் 7. 20 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
விழாவின் நிறைவாக, சிவன், அம்மன் ஆகவும், அம்மன், சிவன் ஆகவும் வேடமிட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும், பஞ்சப் பிரகாரம் மார்ச் 14-ம் தேதி நடைபெறுகிறது.
உலகத்திலேயே இந்தக் காட்சியானது இந்த திருக்கோயில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதக் காட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.