மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 6 மாத ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அதே ஊரில் இருக்கும் மந்திரவாதி ராகவீர் தடக் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த ராகவீர், குழந்தை உடலில் ஆவி புகுந்துள்ளதாக கூறி, தீ மூட்டி அதற்கு மேல் குழந்தையைக் கட்டி தொங்கவிட்டுள்ளார். இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. மேலும், குழந்தையின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கண்பார்வை பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.