திருச்சி: முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுக கூட்டம்

70பார்த்தது
அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணி செயலாளர்கள் கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்த நாளில் ஏழைஎளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி ஆகியவற்றில் 9 பேர் கொண்ட பூத் கிளைகளை விரைவாக அமைக்க வேண்டும், இளைஞர், இளம்பெண்கள் பாசறை கிளைகளை அமைக்க வேண்டும், இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் உறுப்பினர்களை விரைவாக சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொரடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, சிவபதி, முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி