மணப்பாறை: பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி

54பார்த்தது
மணப்பாறை: பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
மணப்பாறை அருகே உள்ள தேனூர் வரதகோன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி வயது 60. சம்பவம் நடந்த நேற்று அப்பகுதியில் சாலையில் நடந்து செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த வளநாடு போலீசார் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர் மனோகர் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி