
திருச்சி நெல் பயிருக்கு துத்தநாகசத்து இணை இயக்குனர் தகவல்
நெல் பயிர் சாகுபடியில் துத்தநாக சல்பேட்டை இடும்முறை குறித்து திருச்சி வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நெற்பயிருக்கு அடிப்படையாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் தலை சாம்பல் இரும்பு துத்தநாகம் தாமிரம் மெக்னீசியம் ஆகியவை ஆகும். ஒரே நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்வதால் நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி கரையா உப்புக்கள் அதிகரித்து துத்தநாக சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். மண்ணில் சுண்ணாம்பு தன்மை அதிகம் இருந்தால் துத்தநாகசத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்படும் பயிறுக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணிச்சத்து மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து விடுவதால் அவை துத்தநாகசத்தின் செயல் திறனை குறைக்கிறது துத்தநாகசத்து பற்றாக்குறை இருந்தால் பயிர் வளர்ச்சி குன்றி இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறிவிடும் பின்னர் காய்ந்து விடும் இதனால் விளைச்சல் குறைவு ஏற்படும் எனவே துத்தநாக சத்து பற்றாக்குறை நிவர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நடவிற்க்கு முன் சீராக வயலில் தூவ வேண்டும். என திருச்சி வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.