தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் தலைமையில் திருச்சி கண்ட்டேன்மெண்டில் உள்ள இந்தியன் வங்கி முன்பு நேற்று மத்திய அரசுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வங்கி துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும், கருணைத்தொகை சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் விட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கம் துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகள் சங்கம் மண்டல செயலாளர். குருநாதன், அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு வங்கியை சேர்ந்த வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.