
திருச்சி: 9 ‘சிக்னல்’களில் நிழற்பந்தல்; போலீசார் திட்டம்
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்காக 9 போக்குவரத்து 'சிக்னல்'களில் நிழற்பந்தல் அமைக்க போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் புதூர் மற்றும் கரூர் பைபாஸ் ரோடு சந்திப்பு பகுதியில் ஒரு வாரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நிழற்பந்தல் அமைக்க ரூ. 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை செலவாகும். இந்த பந்தல் சுமார் 20 அடி நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. இதனால் வெப்பத் தாக்குதலை சமாளிக்க இயலாமல் மக்கள் சிக்னல்களில் நிற்காமல் செல்வதை தடுக்க முடியும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.