அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தவெக தயாராகி வருகிறது. கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பூத் கமிட்டி நிர்வாகிகளை தயார் செய்யுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உங்கள் வார்டில் எத்தனை பூத் இருக்கிறது உள்ளிட்ட முக்கிய விபரங்களை தவெக பூத் கமிட்டி மாநாட்டுக்கு முன் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.