மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் புகார்: கோட்டாட்சியர் விசாரணை

60பார்த்தது
மணப்பாறை அருகே மணப்பாறைபட்டியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்ற 4 ம் வகுப்பு மாணவியிடம் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் என்பவர் கடந்த 6 ம்தேதி வியாழக்கிழமை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நிலையில் பாதிக்கப்பட்ட மாணவகயின் உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கினர். சனியை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திங்கட்கிழமை காலை பலத்த போலீஸ் பாதுகாப்பும் பள்ளி திறக்கப்பட்டது.

மாணவா்கள் வருகை குறித்து கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலா் பேபி மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன் தலைமையிலான வருவாய்த்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். பிற்பகலில் அதிகாரிகள் தரப்பில் மாணாக்காா்களின் பெற்றோா்களுக்கு கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் குழந்தைகள் பாதுக்காப்பு அலகு அதிகாரிகள் பெற்றோா்கள் பங்கேற்றனா். கடந்த நிகழ்வுகளை மறந்து நடைபெறவுள்ல அரசு பொதுத்தோ்வுகளை நினைவில் வைத்து மாணவா்களின் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும், குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி