திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளிபட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் அதை ஊரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் தேவேந்திரன் இருவரும் நேற்று மாலை டூ வீலரில் கரும்புள்ளிபட்டியிலிருந்து அய்யலூர் திருவிழாவிற்கு சென்று விட்டு மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
டூவீலரை மணிகண்டன் ஓட்டினார் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வத்தமனியாரம்பட்டி என்ற இடத்தில் வந்த போது நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் நிலை தடுமாறி சாலை நடுவில் இருந்த செண்டர் மீடியனில் மோதியதில் மணிகண்டன் மற்றும் தேவேந்திரன் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.