திருச்சி மாவட்டம், மருங்காபுரியை அடுத்த பழையப்பாளையத்தில் ஆதிதிராவிட நலத் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றன. இதில், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வியாழக்கிழமை, மணப்பாறை அனைத்து மகளிர் போலீசாரால் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
நாகராஜன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பள்ளிக்கு பணிக்கு வரும் வரை, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி பெற்றோர்கள் போராடி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இருப்பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர். இரு பள்ளிகளிலும் தலா ஒரு மாணவர் மட்டுமே வந்தனர்.