முசிறி அறிஞர் அண்ணா கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி

54பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முசிறி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டச் சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி துவங்கியது. பேரணியை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முருகராஜ் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி போலீசார் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி