மழை காரணமாக உளுந்து, பயிறு, பருத்தி வகைகள் பாதிப்பு

82பார்த்தது
நாகை: திருமருகல் ஒன்றியத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக உளுந்து, பச்சைப்பயிறு, பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. சம்பா அறுவடை நடைபெறும் போதே உளுந்து, பயிறு வகைகளை ஜன.15 முதல் பிப். 15 வரை பயிரிடும் பணிகள் நடைபெற்றது. தற்போது திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, 2 நாட்கள் பெய்த திடீர் கனமழை காரணமாக சில இடங்களில் பயிர் வகைகள் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோல் பருத்தி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி