இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய திருச்சி ஆட்சியரிடம் மனு

69பார்த்தது
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் சமீபத்தில் மலை மீது இஸ்லாமியர் இறைச்சியை கொண்டு சென்று சாப்பிட்டதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஜேபி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும், பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா மற்றும் சுப்ரமணியசாமி ஆகியோர் மலைமேல் இருக்கும் தர்காவை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்டித்தும் தமிழகத்தில் மத நம்பிக்கையை சீர்கெடுக்கும் விதமாகவும், மதக்கலவரத்தை ஏற்படுத்து விதமாகவும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, இதனை கண்டித்தும், இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் செழியன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜனநாயக சமூக கூட்டமைப்பு, ரெட் பிளாக் கட்சி மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி