மணப்பாறை ஸ்ரீ குரு வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், தனியார் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராகுல்காந்தி தலைமையிலான அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினமே மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் சீண்டல் நடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் ஒரு புகார் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மீண்டும் திங்கள் கிழமை விசாரணை நடத்த உள்ளதாகவும், அன்றையதினம் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி தகவல்.
பள்ளி ஆசிரியர்களிடம் இதுகுறித்த தகவல் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணை குறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கபடும் எனவும் தெரிவித்தார்.