
திருச்சியில் மாயமான கார் மீட்பு போலீசார் அதிரடி
தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் குடும்பத்துடன் நேற்று கரூர் பரமத்தி வேலூருக்கு காரில் சென்றார். திருச்சி வழியாக சென்றபோது சத்திரம் பேருந்து நிலையம் அருகே உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கார் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் கோட்டை போலீஸ்க்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் காரை திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து ஜி கார்னர் பகுதியில் ஒரு கார் ஆளில்லாமல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது அந்த கார் கிருஷ்ணமூர்த்தி உடையது என தெரியவந்தது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து காரை திருடிய மர்ம நபர் குறித்து தடை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.