அரியலூர் ஒட்ட கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்தவர் கவியரசு (வயது 21) இவர் திருச்சி சஞ்சீவி நகர் மெயின் ரோடு பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது மூன்று வாலிபர்கள் ஆளுக்கு ஒரு ஜூஸ் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பிச் சென்றனர். அப்போது கவியரசு அவர்களிடம் ஜூஸ் குடித்ததற்கான பணத்தை கேட்டார்.
இதில் வியாபாரிக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் ரூபாய் 2000 பணத்தை பறிக்க முயன்றனர். இதுகுறித்து கவியரசு உடனடியாக கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் திருச்சி பூசாரி தெரு முனிசிபல் காலனி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (29), திருச்சி ஓடத்துறை காவேரி பாலம் பகுதியைச் சேர்ந்த விஜய் (27), திருச்சி திருவானைக்காவல் தண்ணீர் தொட்டி முகில் தோப்பு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (23) என்பது தெரிய வந்தது.