திருச்சி மாவட்டம், முசிறி அருகே பைத்தம்பாறை கிராமத்தில் அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், ஜெயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி, மாநில இளைஞரணி செயலாளர் என். ஆர். சிவபதி, முன்னாள் அமைச்சர் அண்ணாவி மற்றும் பலர் பேசினார். அப்போது கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுவையில் தற்போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அனைத்தும் கெட்டு விட்டது. திமுகவிற்கு ஆலோசனை சொல்வதற்கு ஒருத்தர் உள்ளார். அவர் யார் என்றால் எங்க ஊர் காரர் (கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜி) பெரிய கில்லாடி. அதாவது ஆளை மயக்கி தான் இருக்கும் இடத்தில் மந்திரியாக இருப்பவர் இவரஒருவர் தான். சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரை கண்டிக்கிறார் என்று சொன்னால் அது மிகப்பெரிய அபாயம். மிகப்பெரிய குற்றவாளி. சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கேட்டுள்ளார் எம்எல்ஏ என்று சொல்லி ஜாமின் பெற்றுவிட்டு தற்போது அமைச்சராகி உள்ளார். மந்திரி பதவி நீடிக்க வேண்டுமா, இல்லையா என்று கேட்டு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார் என்று பேசினார்.