ஜக்கி வாசுதேவ் தொடர்பான வீடியோக்களை நீக்க உத்தரவு

74பார்த்தது
ஜக்கி வாசுதேவ் தொடர்பான வீடியோக்களை நீக்க உத்தரவு
ஈஷா மையம், ஜக்கி வாசுதேவ் குறித்த யூடியூபர் ஷ்யாம் மீரா சிங்கின் வீடியோக்களை நீக்க கூகுள், எக்ஸ், மெட்டா நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷ்யாம் மீரா சிங் தனது யூடியூப் பக்கத்தில் ஈஷா தொடர்பான சில வீடியோக்களை பதிவேற்றியிருந்தார். அங்கு சிறுமிகளை மேலாடையின்றி நிற்கச் சொல்வதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். தனது விளம்பரத்திற்காக ஷ்யாம் மீரா இது போன்று பொய் பரப்புவதாக ஈஷா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவதூறு வீடியோவை நீக்க நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி