முருகன் கோயிலில் மிகவும் சிறப்பாகவும், முக்கிய தலமாகவும் விளங்கும் வயலூர் முருகன் கோயில் விளங்கி வருகிறது. இந்த திருக்கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
அதன் பின்னர் தற்போது வயலூர் முருகன் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
கோவில் இறுதி கட்டப் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு செல்வதற்காக சோமரசம்பேட்டை- கோப்பு மெயின் ரோட்டில் நுழைவு வாயில் வளைவு இருந்தது. அந்த நுழைவு வாயில் பழுதடைந்ததால் தற்போது அதன் அருகே புதிதாக நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் சுமார் 30லட்சம் ரூபாய் செலவில் தூண்கள் அமைக்கப்பட்டு இன்று குறுக்கே கான்கிரீட் தூண் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென சாரம் சரிந்ததால் புதிதாக கட்டப்பட்ட நுழைவாயில் இருபுறத் தூண்கள் மற்றும் பீம் முற்றிலும் சரிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாதத ஒரு எவ்வித பாதிப்போ, உயிர் படையோ ஏற்படவில்லை.
கும்பாபிஷேகம் நடைபெறும் உள்ள நிலையில் கோவில் நுழைவாயில் சரிந்து விழுந்தது பக்தர்கள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.