
திருச்சி தெற்கு போக்குவரத்து பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்
திருச்சி தெற்கு போக்குவரத்து துறை பெண் இன்ஸ்பெக்டரை நேற்று (பிப்.23) சஸ்பெண்ட் செய்து மாநகர கமிஷனர் காமினி உத்தரவிட்டார். திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அபிராமி. இவர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்த புகார்கள் குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் இவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதும் அவர் மீது எழுந்த புகார்கள் உண்மைதான் என தெரிந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மாநகர கமிஷனர் காமினி போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அபிராமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.