மணப்பாறை - Manapparai

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள காய்கறி கடையில் 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கடந்த மார்ச் 25ஆம் தேதி சக ஊழியரான உமருடன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்.  அப்போது வேலைக்கு இடையூராக லோடு வண்டி கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து கேட்டபோது லோடு வண்டி டிரைவர் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேர் ஆத்திரத்தில் செல்லமுத்துவை கம்பியால் தலையில் அடித்து காயப்படுத்தினர். காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.  செல்லமுத்து அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இபி ரோடு அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அபினேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా