நகைக்காக பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர் இந்திராணி மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 7 நாட்களுக்கு பின் துப்பு துலங்கி உள்ளது. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் சந்திரசேகர், அமர்நாத் என்ற இருவரை கைது செய்த, காவல்துறையினர் நகைக்காக கொலை நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.