சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே கரடியூரில் கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் 38 வயதான நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை, பாட்டி, அத்தை ஆகியோர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.