கேஸ் ஸ்டவ் பர்னரில் தேங்கும் எண்ணெய் பிசுக்குகள் காரணமாக பர்னர் சரியாக எரியாது. இதனால் சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதுடன், எரிவாயுவும் வீணாகிறது. இதற்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வினிகர், பேக்கிங் சோடா சேர்த்து நுரைத்து வந்ததும், வாஷிங் லிக்விட், லெமன் சால்ட் சேருங்கள். இதில் பர்னரை ஊறவிட வேண்டும். இதிலுள்ள அழுக்குகள் வெளியேறத் தொடங்கும். அரை மணி நேரத்திற்குப் பின்னர் எடுத்து கழுவினால் பர்னர் சுத்தமாகிவிடும்.