கருமையான உதடுகள் சிகப்பாக மாற, வீட்டிலேயே பீட்ரூட்டை வைத்து லிப் பாம் செய்யலாம். பீட்ரூட்டை அரைத்து, வடிகட்டி சாறை தனியாக எடுத்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறவும். ஆறியவுடன் ஒரு கிண்ணத்தில் ஊற்றி பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வேஸ்லின், விட்டமின் ஈ மாத்திரை சேர்த்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு இந்த லிப்பாமை பயன்படுத்தி வந்தால் கருப்பாக இருக்கும் உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.