இரும்புச் சத்து பற்றாக்குறையினால் அனீமியா போன்ற நோய்கள் வருகின்றன. இதே போல் உடலில் இருக்கும் தாதுக்கள் பற்றாக்குறை காரணமாக பல நோய்கள் வருகின்றன. ஆனால் செம்பு சத்து பற்றாக்குறையினால் உருவாகும் நோய் என எதுவுமே இல்லை. உடலுக்கு செம்பு சத்தின் தேவை குறைவு தான். இது காய்கறி, கீரைகள், நட்ஸ்கள் மூலம் கிடைத்து விடும். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குடிப்பதால் பெரிய பயன்கள் கிடைக்காது என மருத்துவர் அருண்குமார் விளக்கியுள்ளார்.