
திருச்சி: வெங்காய லோடு லாரி சாலை நடுவே கவிழ்ந்து விபத்து
திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் மினி லாரி டிரைவர். இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து நேற்று காலை மினி லாரியில் வெங்காயம் ஏற்றிக்கொண்டு பெட்டவாய்த்தலைக்குச் சென்றார். திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரம் அடுத்த மண்டபம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தாறுமாறாக ஓடி சாலை நடுவே கவிழ்ந்தது. அப்போது வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறிக் கிடந்தன. இந்த விபத்தில் டிரைவர் பிரபாகரன் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். தகவல் அறிந்து வந்த ஜீயபுரம் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு சாலையில் கவிழ்ந்துகிடந்த மினிலாரியை மீட்டு தடைபட்டிருந்த போக்குவரத்தைச் சீர்செய்தனர்.