தூத்துக்குடி: அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் மரணம்?
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த டிராக்டர் டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காமராஜ் நகர் சேர்ந்தவர் வீர புத்திரன் மகன் உத்திரபாண்டி (35), இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் நேசமணி நகரில் உள்ள ஒரு சால்ட் கம்பெனியில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் தினசரி மது குடிப்பாராம். நேற்று (அக்.,8) அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அங்குள்ள தோட்டத்தில் படுத்திருந்தார். இன்று காலையில் பார்த்த போது அவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து, முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.